Tuesday, February 10, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ் 2

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.
-------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?****சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.****டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
----------------------------------

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

-----------------------------------

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்டு ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

------------------
சர்தார்ஜி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் நண்பரைப் பார்க்கச் சென்றார்.நண்பரின் உறவினர்கள் அனைவரும் வெளி வராண்டாவில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.மருத்துவர் இன்னும் சில நாட்களில் குணமாகிவிடும் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.அவர்களை விடுத்து சர்தார்ஜி தம் நண்பர் இருக்கும் அறைக்குச் சென்று வாங்கி வந்த பழங்களை அருகில் இருந்த மேசையின்மேல் வைத்துவிட்டு தம் நண்பரின் அருகில் சென்று பார்த்தார்.அவரோ முகம் வெளிறி மூச்சுவிட மிகவும் சிரமப் பட்டுக்கொண்டிருந்தார்.திடீரென என்னவோ சொல்லமுற்பட்டார் நோயாளி நண்பர்.அவரின் செய்கையை வைத்து காகிதமும் பேனாவும் கேட்கிறார் எனப் புரிந்துகொண்டு கொடுத்தார்.நண்பர் எழுதிக் கொண்டிருக்கும்போதே இருமுறை உடல் வெட்டி இழுத்தது.அவ்வளவுதான் உயிர் பிரிந்துவிட்டது.அப்போதிருந்த அவசரத்தில் உடனே காகிதத்தை சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்தார்.வீட்டிற்கு வந்ததும்தான் காகித ஞாபகம் வந்தது சர்தார்ஜிக்கு.மனைவியிடம் கொடுக்கச் சொல்லி ஏதும் ரகசியமாக நண்பர் எழுதி இருக்கலாம்...அடுத்தவரின் மடலைப் படிப்பது தவறு என்றெண்ணி அதனை எடுத்துக்கொண்டு மறுநாள் நண்பரின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியிடம் கொடுத்தார்.வாங்கிப் படித்த அந்த அம்மாள் மூர்ச்சையாகி விழுந்தார்!அப்படி என்னதான் எழுதி இருக்கிறது என அக்காகிதத்தை எடுத்துப் படித்தார் சர்தார்ஜி...அதில்..... "சீக்கிரம் நகருடா...நீ ஏறி நிக்கிறது எனக்கு ஆக்ஜிஸன் வர்ற டியூப்!!!"

---------------------------------
அமெரிக்காவின் மிக முக்கிய சாலையொன்றில் காரைச் செலுத்திக்கொண்டிருந்தார் நம் சர்தார்ஜி. வளைவு, நெளிவுகள், முந்துதல், பிந்துதல்,வேகம் எல்லாமே விதிப்படிதான் செய்தார்.இருந்தாலும் தன்னை போக்குவரத்துக் காவலர்கள் பின் தொடர்வதை பக்கவாட்டில் உள்ள கண்ணாடியில் பார்த்தார்.நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் காவலர்கள் இவரின் காரை வழி மறித்தனர்.காரில் இருந்து இறங்கி வந்து சர்தார்ஜியின் கையைக்குலுக்கி"இவ்வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம்.நாங்கள் சிறந்த வாகன ஓட்டுனர்களைக் கண்டறிந்து பாராட்டுப்பத்திரமும் பணமுடிப்பும் வழங்கிக் கௌளரவிப்போம்.நெடுநேரமாக உங்களைப் பின் தொடர்ந்ததில் நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுனர் என முடிவு செய்தோம்"உடனே சர்தார்ஜி சொன்னார்,"அப்படியா மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பா கிடைக்கும் பணத்தில் முதலில் லைசென்ஸ் எடுத்துவிடுவேன்"சர்தார்ஜியின் மனைவிக்கு கோபம் வந்து கத்தினார்"அவர் சொல்றதை நம்பாதீங்க...அவர் ஏதோ குடிச்சிட்டு உளறுகிறார்!"காரில் தூங்கிய சர்தார்ஜியின் காது கேளாத அம்மா களேபரங்களைக் கேட்டு கண்விழித்து சொன்னார்"ஏண்டா நான் அப்பவே சொன்னேனே கேட்டியா...திருட்டுக் காரை எடுத்து வரவேண்டாம் இங்கெல்லாமுன்னு!!!
-------------------------------------------------------
உதவி..!உதவி..!கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது..எங்கும் அழுகுரல்கள்.. ஓடினர்..அழுதனர்.. பலர் இறைவனைத் தொழுதனர்..நம் சர்தார்ஜிக்குப் பக்கத்தில் நின்றிருந்த இத்தாலியர் கேட்டார்,“இங்கிருந்து நிலம் எவ்வளவு தொலைவு?”“இரண்டு மைல்கள்”-சர்தார்ஜி பதில் அளித்தார்.“ப்பூ..வெறும் இரண்டு மைல்தானா? இதுக்குப் போய் ஏன் இந்த முட்டாள்கள் அழுது புலம்புகின்றனர்? எனக்கு நீச்சலில் நல்ல அனுபவம் உண்டு” சொல்லிக் கொண்டே கடலுக்குள் குதித்தார் இத்தாலியர்!குதித்த இத்தாலியர் தண்ணீரின் மட்டத்திற்கு வந்ததும் கேட்டார், "எந்தப் பக்கமா நீந்தனும்?”“அப்படியே கீழ் நோக்கி”-சர்தார்ஜி அசால்ட்டாகப் பதிலளித்தார்

-------
சர்தார்ஜி பல்கலைக் கழகத்தின் இறுதி ஆண்டுத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். தன் இருக்கை தேடி அமர்ந்ததும் கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் முழுதையும் ஐந்து நிமிடம் வாசித்தார். பின் தனது காலணிகளைக் கழட்டி ஜன்னலுக்கு வெளியே வீசினார். பின் தனது தலைப்பாகையை வெளியே வீசினார். அடுத்து தனது மேற்சட்டை, குழாய்ச் சட்டை, காலுறைகள், கைக்கடிகாரம் என எல்லாவற்றையும் அவ்வாறே வெளியே வீசினார். எஞ்சியது அவரின் உள்ளாடை மட்டுமே!அப்போதுதான் பார்த்த கண்காணிப்பாளர் ஓடிவந்து கெட்டியாக சந்தார்ஜியைப் பிடித்துக்கொண்டு கேட்டார்,” என்ன நடக்குது இங்கே?” “நான் இந்த கேள்வித்தாளில் எழுதி இருந்த அறிவுரைப் படிதான் நடக்கிறேன். நீங்களே பாருங்க..ஆன்சர் த பாலோயிங் கொஸ்டின் இன் ப்ரீப்( Answer the following questions in brief!) னு எழுதி இருக்குது!”:?
-----

0 comments:

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP