Friday, February 13, 2009

காதல் கவிதை 1


தனிமையில் சந்தித்தேன்
என்னை ...
--------------------
மிகமோசமான விபத்து
உன் முத்தம் .
----------------------
கால் நனைத்துவிட்டு போனாய்
கடல் உள் வாங்கியது
நீ முகம் கழுவிய பிறகு தான்
நிறைய முத்து கிடைத்தது...
மறுநாள் நீ வரவில்லை
கடுப்பாகி சுனாமியாய் அடித்தது ...
-----------------------------

ஆக்கம்- ஆழை ரவி

Thursday, February 12, 2009

என் ஹைக்கூ 6

கால் நடுவில் சிறு ஓட்டை..
ஊசி வைத்து அடைத்தேன் ..
கால்சட்டையில் பூ தையல் .
(பேண்ட்-ல் எம்ப்ரோய்டரி )
----------------------
கூட்டத்தில்
தூக்கி காட்டினாள் நடிகை
தன் கையை ...
----------------------------
-- ஆழை ரவி

படித்த கவிதைகள் 1

இவை நான் எங்கோ படித்தது ...
ஆனந்தவிகடன், பாக்யஎ .. போன்ற வர இதழில் ..
----------------------------------
நீ மிடியில் ஹைகூ
சுடிதாரில் கவிதை
சேலையில் காவியம்
-----------------------------------

பெண்ணே .. நீ
நடந்தால் உர்வலம்
நின்றால் பொதுக்கூட்டம்
பேசினால் மாநாடு ..
--------------------------------------
பூவுக்குள் பூகம்பம்
அவள் பூப்பெய்தினாள்
--------------------------------------------

என் ஹைக்கூ கவிதை 5

என் மிதி தங்காமல்
சத்தம் போட்டது ...
காலடியில் சருகு .
----------------

ஆக்கம் ஆழை ரவி

என் ஹைக்கூ கவிதை 4

இலங்கையில் புதையல் ..
தமிழ் குழந்தைகளின்
இளம் கைகள் கிடைத்தன ...
----------------
காட்டுக்குள் கடுமையான போர் ...
பறவைகள் பத்திரமாய் உள்ளன
நல்லவேளை அவைகள்
தமிழ் பேசவில்லை ...
---------------
எழுதியர்-- ஆழை ரவி

Wednesday, February 11, 2009

என் ஹைக்கூ கவிதை 3

தியாகிகள் தினம் கொண்டாட கூடாது
தினம் தியாகிகளை கொண்டாட வேண்டும் ...
------------------------------------------------------
திருடனை இரண்டு அடி கொடுத்து
திருத்த வேண்டும் ....எடுடா அந்த
திருக்குறளை ..
-------------------------------------------------------
நீ கடலில் கால் வைத்தாய்
நனைத்து போனது
என் இதயம்
---------------------------------------------

எழுதியவர் - ஆழை ரவி

என் ஹைக்கூ கவிதை 2

பொந்துக்குள் கம்பை நுழைத்தேன்
இதமாக இருந்தது ...
காதுக்குள் தீக்குச்சி .
---------------------------------------------
எழுதியவர் - ஆழை ரவி

ஹைக்கூ கவிதை 1

கிளம்பி கிளம்பி
அடங்கியது ...
கடலில் அலைகள் .
---------------------------------
விரித்து காட்டும்போது
எவ்வளவு அழகு ...
வண்ணத்துபூச்சி தன் சிறகை .
--------------------------------------
எழுதியவர் - ஆழை ரவி

Tuesday, February 10, 2009

சர்தார்ஜி ஜோக்ஸ் 4

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பிய சர்தார் தன் மனைவியிடம் கேட்டார்சர்தார் : என்னை இப்ப பார்க்கும் போது வெளிநாட்டுக்காரன் மாதிரி இருக்காமனைவி : இல்லையே , ஏன்?சர்தார் : (சிரித்தபடி) லண்டனில் ஒரு பெண் கேட்டாள் நீங்க வெளிநாட்டுக்காரரானு

----------------------

வெளி நாட்டுக்காரர் ஒருவர் சர்தார் கிராமத்திற்கு வந்துள்ளார்வெளி : இந்த கிராமத்தில் யாரேனும் பெரிய மனிதர்கள் பிறந்துள்ளார்களா?சர்தார் : அப்படி யாரும் இல்லை எல்லாமே சிறு குழந்தைகளாக தான் பிறக்கின்றனர்.

----------------

சர்தார்ஜிகளின் அறிவுத் திறமை தொடர்பாக ஒரு சர்தார்ஜிக்கும் அவரது நண்பருக்கும் இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. தங்களுக்கு அறிவு இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பிய சர்தார்ஜி தன்னிடம் ஏதாவது ஒரு கேட்டால் தான் அதற்கு சரியாக பதில் அளிப்பதாகக் கூறினார்.நண்பரும் ஒரு கேள்வி கேட்டார். “கேப்டன் குக் உலகை மூன்று முறை கப்பலில் சுற்றி வந்தார். அதில் ஒரு முறை இறந்து விட்டார். எத்தனையாவது முறை உலகை சுற்றி வரும்போது கேப்டன் இறந்தார் என்பதை சொல்ல முடியுமா?”அதற்கு சர்தார்ஜி, “மன்னிக்கவும். எனக்கு சரித்திரத்தை அதிகம் படிக்கவில்லை. வேறு ஏதாவது கேள்வி கேட்க முடியுமா?’ என்றாரே பார்க்கலாம்.
----------------

அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பியும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு.. அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு.. ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்ட அடுத்த வீட்டுக்காரன் இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு.." கவலப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!

------------------------

ஒரு சர்தார்ஜி இண்டர்வியூவுக்குச் சென்றிருந்தார்."உங்க வயசென்ன?"சர்தார்ஜி கைவிட்டு எண்ணி "25 வயது" என்றார்."சரி. உங்க உயரம் என்ன?"சர்தார்ஜி உடனே எழுந்து ஒரு டேப்பைத் தன் பையிலிருந்து எடுத்து அளந்து "6 அடி" என்றார்.நொந்து போன கேள்வி கேட்பவர், "சரி உங்க பேரு தான் என்ன?"சர்தார்ஜி தலையை இடம் வலமாய் ஆட்டியவாறு பத்து செகண்டு கழித்து "சாண்டா சிங்""ஆமா! உங்க பேரு கேட்டப்போ என்ன செஞ்சீங்க?""அதுவா? ஹேப்பி பர்த் டே டு யூ பாடிப் பார்த்தேன்"
-------------------------------

சர்தார் உங்களுக்கு தொல்லை குடுத்துகிட்டு இருக்காரா..? அவர்ட்டேருந்து தப்பிக்கணுமா..?ஒரு வெள்ளைத் தாளை அவர் கையில் குடுத்துடுங்க.. ஆனா மறக்காம ரெண்டு பக்கத்திலேயும் "தயவு செய்து திருப்பி பார்க்கவும்" அப்படின்னு எழுதிக் கொடுத்துடுங்க..!

-----------------------------------

ஒரு சர்தார்ஜி, ஒரு ஜப்பான்காரன், ஒரு அமெரிக்கன் ஆகியோர் ஒரு கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்தனர். கீழே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.கீழே இருந்து தீயணைப்பவர்கள் ஒரு பெரிய வலையைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்றனர். ஜப்பான்காரன் கீழே விழுந்தான். தீயணைப்பவர்கள் வலையை விட்டு விட்டனர். ஜப்பான்காரன் இறந்தான்.கீழே குதியுங்கள். நாங்கள் பிடித்துக் கொள்கின்றோம் என்று மீண்டும் சொன்னார்கள். அமெரிக்காக்காரன் குதிக்க மறுத்தான். தீயணைப்பவர்கள் இந்த முறை கீழே விட மாட்டோம் என்றனர். கொஞ்சம் தயங்கி விட்டு அமெரிக்காக்காரன் கீழே குதித்தான். அப்போதும் வலையைத் தவறவிட்டதால் அவனும் செத்தான்.அடுத்து சர்தார்ஜியையும் அவர்கள் குதிக்கச் சொன்னார்கள். சர்தார்ஜி சொன்னார், "உங்களை நம்ப முடியாது. நீங்க வலையை கீழே விரித்து விட்டு அப்பால் போங்க. நான் குதிச்சிக்கிறேன்" என்று குதித்தார்!

-----------------------

சர்தார்ஜி ஒரு கடைக்குச் சென்றார். அங்கிருந்த கடைக்காரரிடம், இந்த டிவியை நான் வாங்க வேண்டும் என்றார். கடைக்காரர் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.மறுநாள் தனது டர்பனைக் கழட்டி விட்டு சர்தார் சென்று, அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார்.மறுநாள் மொட்டை போட்டுக் கொண்டு சென்ற சர்தார், "அந்த டிவி எனக்கு வேண்டும் என்றார். கடைக்காரர் மீண்டும் "சர்தார்ஜிகளுக்கு நாங்கள் டிவி விற்பதில்லை என்றார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். எப்படி நான் சர்தாருன்னு கண்டுபுடிச்சீங்க? என்றார்.ஏன்னா அது மைக்ரோவேவ் ஓவன் என்றார் கடைக்காரர்.
-----------------------------

ஒரு சர்தார்ஜியும்ஒரு தமிழனும் இரயில்ல வந்துக்கிட்டு இருந்தாங்க.இரயில் ஓடிக் கொண்டிருந்தது.தமிழன்மேலே வைத்த பெட்டியில் இருந்து ஏதையோ எடுக்கபெட்டியை தூக்க முயன்றார்.பெட்டி பாரமாக இருந்ததால் தூக்க முடியாமல் திணறினார்.உடனே சர்தார்ஜிலாவகமாக பெட்டியை தூக்கி கீழே வைத்து விட்டு"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்றுநக்கலாக சிரித்தான்.சற்று நேரத்தில்கீழே வைத்த பெட்டியை மேலே வைக்க முடியாமல்தமிழன் மீண்டும் தடுமாறினான்.அதற்கும் உதவிய சர்தார்ஜி"இதுக்கெல்லாம் ரொட்டி சாப்பிடனும்" என்றுநக்கலாக மீண்டும் சிரித்தான்.இரயில் ஓடிக் கொண்டிருந்தது.திடீரென பதட்டமாக தமிழன்இரயில் சங்கிலியைஇழுக்க முயன்று முடியாமல் தடுமாறினான்.உடனே சர்தார்ஜிஇரயில் சங்கிலியை இழுத்துஇரயிலை நிறுத்தினார்.அதிகாரிகள் வந்துயார் இரயிலை நிறுத்தியது என்று கேட்ட போதுதமிழன் சர்தார்ஜியை நோக்கி விரலை நீட்டினான்.சர்தார்ஜீ திருதிரு என்று முழித்து கத்தினார்.அதிகாரிகள் சர்தார்ஜியை பிடித்து கொண்டு போனார்கள்.தமிழன் சொன்னான்"இதுக்கெல்லாம் ரைஸ் சாப்பிடணும்"

------------------------------
சர்தார் : என் மனைவியும் வாட்ச்மேனும் சினிமா தியேட்டருக்கு போனாங்கநண்பன்: அவர்கள் பின்னால் போகவில்லையா?சர்தார் : நான் ஏற்கனவே அந்த படத்தை பார்த்து விட்டேன்
------------------------
பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏல விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.. இடையில் திடீரென ஒரு அறிவிப்பு..."கனவான்களே...! நம் மரியாதைக்குரிய கஞ்சா சிங் அவர்கள் தன் பணப்பையை தொலைத்து விட்டார்.. அதில் 10,000 ரூபாய் உள்ளது. கண்டெடுத்து தருபவர்களுக்கு இனாம் 2000 ரூபாய்.."கூட்டத்தில் ஒரு குரல் கிளம்பியது... " 2500 ரூபாய்...!"கடைசியில் ஒரு ஆள் 27,500க்கு ஏலம் எடுத்தார்!!!
----------------------

சர்தார் பொது கழிப்பிடத்தில்..தன்னுடைய பாரத்தை இறக்கிக் கொண்டிருக்கும் போது..பக்கத்து அறையில் இருந்து..அப்புறம் எப்படி போகுது..?சர்தார் அதிர்ச்சி அடைந்து..பரவால்லே.. சுமாரா..அப்படியா.. சரி..சரி.. சுகப் பிரசவம் தானே..சர்தார்.. அட.. ஆமாம்.. அங்கே எப்படி..நான் அப்புறம் பேசறேன் மாப்ளே.. இங்கே பக்கத்துலே ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..!!சர்தார் ???????????
----------------------
சர்தாரும் அவர் நண்பனும் நடந்து பபோய்க்கொண்டிருந்தார்கள்....சர்தார் 1. ஐய்யோ குருவே என் மனைவியும் என் காதலியும் ஒண்ணா வந்துகிட்டிருக்காங்க..நண்பன் ; ஐயய்யோ.. ஆமாண்டா.. !!! நான் சொல்ல நெனச்சத நீ சொல்லிட்டே..!!!!
--------------------------------------
இரண்டு சர்தார்கள் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.முதல் சர்தார் சொன்னார்.."நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம், அப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது. போட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்".'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க?' என்றார் மற்ற சர்தார்."என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்".இரண்டாவது சர்தார் தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது. அங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை. அன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை. வேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் "எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது" என்று சொல்லி விட்டார்கள். அதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்கள். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று மூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்? என்றார் மற்ற சர்தார். "வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்.."
-----------------------

இந்து, ஒரு சர்தார், ஒரு அமெரிக்கர், விமானத்தில் பயனம் செய்துக் கொண்டிருந்தனர். திடிரென்று விமானத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அது தாருமாறாக பறக்க ஆரம்பித்தது. பாராசூட் இல்லாததால் விமானத்தில் இருந்த மூவரும் உயிரை பனையம் வைத்து அதிலிருந்து கீழே குதிக்க முடிவு செய்தனர்.முதலில் சர்தார் குதித்து விட்டார். தன்னுடைய டர்பனை பாராசூட் போன்று பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். அடுத்து, ஹிந்து குதித்தார். அவர் தன்னுடைய வேட்டியை அவிழ்த்து அதை பாராசூட் போல பிடித்துக்கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தார். கடைசியாக அமெரிக்கர் தன் சட்டையை கழட்டி அதை பாராசூட் போல் பிடித்துக்கொண்டு குதித்தார், ஆனால் அவருடைய சட்டை, மற்றவர்களுடைய டர்பன் அல்லது வேட்டியைப் போல் மெதுவாக இறங்குவதற்கு உதவவில்லை. அதனால் அமெரிக்கர் வேகமாக கீழ் நோக்கி விழ ஆரம்பித்தார். விழும்போது முதலில் ஹிந்துவை தாண்டி கீழே சென்றார். அப்போது ஹிந்து, "உங்களை அந்த பகவான்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார். அடுத்து சர்தாரை தாண்டி சென்றார். அதைப் பார்த்த சர்தார், "என்கிட்டயா போட்டி போடுகிறாய், இப்பபார் யார் வேகமா போறான்னு பார்க்கலாம்" என்று சொல்லிவிட்டு, தான் பிடித்திருந்து டர்பனை விட்டு விட்டார்...
-----------------------------------------------
சர்தாருக்கு வாயுத்தொல்லை இருந்தது..வைத்தியரை அணுகி தம் துன்பத்தைக் கூறினார்..டாக்டர்.. எனக்கு அடிக்கடி வாயு பிரிகிறது,.. ஆனால் சத்தமோ.., நாற்றமோ இல்லை.. ஏன் இப்படி..?டாக்டர் ஒரு மருந்து தந்து ஒரு மாதம் கழித்து வரச்சொன்னார்..ஒரு மாதம் கழித்து வந்த சர்தார்..,டாக்டர்.. இப்போது சத்தமாக வாயு பிரிகிறது..ஆனால் வாடை இல்லையே..?பொறு.. இப்போதானே காதைச் சரி பண்ணியிருக்கேன்..அடுத்தது மூக்கைச் சரி பண்றேன்..!!!
----------------------------------

ஒரு முறை சர்தார் தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்தார், அப்போது அவருடையை நண்பர் ஒருவர் சந்தைக்குப் போய்விட்டு கையில் ஒரு பையுடன் அவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார்.சர்தார்: "மூட்டையில என்ன அண்ணே இருக்கிறது?"நன்பர்: "வேறொன்றுமில்லை கோழிதான்.."சர்தார்: "அண்ணே பையில் எத்தனை கோழிகள் இருக்கிறது என்று நான் சரியாக சொன்னால், எனக்கு ஒரு கோழி தருகிறீர்களா ?நண்பர்: "ஒன்னு என்ன இந்த இரண்டையுமே நீ எடுத்துக் கொள்"சர்தார்: "அஞ்சு கோழி , சரியா?.."
--------------------------------

சர்தார்ஜி ஜோக்ஸ் 3

சர்தார்ஜி புது மாருதி ஒன்றை வாங்கினார். அதனை எடுத்துக் கொண்டு அமிர்தசரசில் இருந்து ஜலந்தருக்கு தனது நண்பனைக் காணச் சென்றார். சிலமணி நேரங்களிலேயே நண்பரின் வீட்டை அடைந்த சர்தார் தன் நண்பரின் வீட்டிலேயே தங்கி சில நாட்கள் ஊரினைச் சுற்றிப்பார்த்தார். வீட்டுக்கு திரும்புவதாக முடிவெடுத்த சர்தார் தன் அம்மாவுக்கு தொலைபேசி செய்து இன்னும் சில மணிநேரங்களில் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று கூறினார்.சிலமணிநேரங்கள் என்று சொன்ன சர்தார் இரண்டு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் தாய் பதறினார். மூன்றாவது நாள் வீடு திரும்பிய சர்தாரைக் கட்டிக்கொண்டு அழுத அவரின் அம்மா,”என்னடா ஆச்சு? ஏன் காலதாமதம்?” மிகவும் களைப்படைந்து போயிருந்த சர்தார் சொன்னார்,” மாருதி தயாரித்தவர்களுக்கு மூளையே இல்லைம்மா..முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சவங்க..ரிட்டர்ன் ஆகறதுக்கு ஒரே ஒரு கியர்தான் வச்சிருக்காங்க!”
--------------------
ரயில் ஒன்று அமைதியாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென பலமுறை ஓடுபாதையில் இருந்து விலகுவதுபோலக் குலுங்கி பின்னர் நேராகச் சென்றது. இச்செய்திக் கேள்விப்பட்ட மேலதிகாரிகள் ஓட்டுநரைக் கைது செய்ய அடுத்த நிறுத்தத்தில் காத்திருந்தனர். ரயில் நின்றதும் ஓட்டுநரைப் பார்த்தால்..அட..நம்ம சர்தார்!மேலதிகாரி கேட்டார்,” ஏன் அப்படி ரயிலை செலுத்தினாய்?’ “மன்னிக்கவும்..பலமுறை நான் ஒலி எழுப்பியும் ஒரு ஆள் தண்டவாளத்தில் இருந்து நகரவே இல்லை! “ “உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு? ஒரே ஒரு ஆள்தானே விட்டு ஏத்திட்டு வரவேண்டியதுதானே..ரயில் புரண்டிருந்தா என்ன பன்றது? உன்னோட செய்கையால இவ்வளவு பயணிகளைக் கொல்லப் பார்த்தியே?” “சாரியா சொன்னீங்க சார்.. நானும் அவன் மேல வண்டிய ஏத்த நினைச்சுதான் ஓட்டினேன். ஆனா அந்த முட்டாள் தண்டவாளத்துல வளைஞ்சு வளைஞ்சு ஓடினான்!”
-------------------------
மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றிய கூட்டத்தில் ஒரு பேச்சாளர் உணர்ச்சிபூர்வமாக பேசினார்,இந்தியாவில் ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒரு பெண் குழந்தை பெற்று, மக்கள் தொகை கூடுகிறது.உடனே ஒரு சர்தார்ஜி உணர்ச்சிவசப்பட்டு “அப்பேர் பட்டவர்களை உடனே கண்டுபிடித்து இந்த செயலை தடுக்க வேண்டும்” என்றாரே பார்க்கலாம்.
-------------------

சர்தார்ஜி: நேற்று ரெயிலில் என்னால் சரியாக தூங்க முடியவில்லை.நண்பர்: ஏன்சர்தார்ஜி: எனக்கு அப்பர் பெர்த் தான் கிடைத்தது.நண்பர்: நீ ஏன் கிழே இருப்பர்களிடம் பேசி மாற்றியிருக்கக்கூடாது?சர்தார்ஜி: நான் இரவு முழுவதும் விழித்திருந்து கீழ் பெர்த்திற்கு யாராவது வருவார்கள், வந்தால் கேட்கலாம் என்று இருந்தேன், யாருமே வரவில்லை.நண்பர்: ????@@@@@@#####
--------------------------

ஒரு நாள் திடீரென்று படியாலா ரயில்வே நிலயத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ஐம்பது சர்தார்ஜீக்கள் இரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்... என்ன நடந்தது ? எதனால் அந்த ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜீக்களும் இறந்து விட்டனர் என்று!அந்த ப்ளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாக கேட்டனர்.அதற்கு அந்த சர்தார்ஜி "இரயில் வருவதற்கான அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைவரும் செத்து விட்டனர்" என்றார்."அப்படியென்ன தவறு" என்று நிருபர்கள் கேட்டதற்கு சர்தார்ஜி சொன்னார்."எல்லோரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர், அப்போது அறிவிப்பாளர் "பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது ப்ளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது " என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்களும் ப்ளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர். ரயில் அனைவரையும் அடித்து விட்டது " என்றார்.உடனே நிருபர்கள் "என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்கள் மட்டுமாவது புத்திசாலித் தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே!!? எப்படி ?? என்றனர்.அதற்கு அந்த புத்திசாலி சர்தார் "நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்தேன்.அறிவிப்பை கேட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிபடுத்துக் கொண்டேன், ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக தண்டவாளத்தில் வந்து விட்டது " என்றாறே பார்க்கலாம்.
------------------
ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜிபக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
-------------------------------
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப் ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்..பஸ் ஸ்டாப் ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்..... கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..சர் அடுத்த ஸ்டாப் ல பிடிச்சிரலாம்னு ஒடுறார், அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது..இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார். வந்தவர் வீட்ல மனைவிகிட்ட எல்ல கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.கேட்ட சர்தாரிணி மனைவிக்கு ரெம்ப கோபம், என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு...........
--------------------------------------
இங்கிருந்து குதிச்ச்டுவேன்".மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லிகடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான்அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார்மறு நாள்பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லிமறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார்மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லிஅவரும் குதிச்சிட்டார்சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லிஅவரும் குதிச்சிடறார்எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்கமதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே"பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே"சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க"
-------------------------

வக்கீல்: உங்க பிறந்த தேதி என்ன?சர்தார்ஜி: ஜூலை 15வக்கீல்: எந்த வருஷம்?சர்தார்ஜி: ஒவ்வொரு வருஷமும்!வக்கீல்: ...! ...! ...!

----
சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.“அடியேய்... நானும், நீயும் அமெரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!

-----------------------
இரண்டு சர்தார்ஜிக்கள் ஒரு திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.இடைவேளையின் போது ஹீரோ ஒரு கட்டிடத்தின் மேல் குதிப்பது போல் நிற்கிறான்.நம்ம 2 சர்தார்களும் பந்தயம் கட்டினர்.முதலாமவர் : ஹீரோ கட்டத்தில் இருந்து குதித்து இறந்து போவான் 100 ரூபாய் பந்தயம்.இரண்டாமவர் : குதிக்க மாட்டான் 100 ரூபாய் பந்தயம்இடைவேளை முடிந்து படம் தொடங்கியது ஹீரோ குதித்து இறந்துவிட்டான்.முதலாமவர் : நான் உன்கிட்ட உண்மைய மறைச்சுட்டேன் நான் ஏற்கனவே படம் பார்த்துவிட்டேன்இரண்டாமவர்:நானும் நேற்றே பார்த்துட்டேன் நேத்து தான் குதிச்சு செத்து போனவன் இன்னைக்கு திரும்பவுமா அப்படி பன்னபோறானு நினைச்சேன்.
------------------------
ஒரு நாள் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து ஒரு புலி தப்பி ஓடிவிட்டது. அந்த புலியை பிடிக்கும் பொறுப்பு சர்தார்ஜி ஒருவரிடம் தரப்பட்டது. புலியைப் பிடிக்க சர்தார்ஜி ஜீப்பில் கிளம்பினார். அடர்ந்த மலைச் சாலைகளில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது தப்பித்த புலி ரோட்டுக்கு வந்து, சர்தார்ஜியின் ஜீப்பைத் துரத்தத் தொடங்கியது. பயத்தில் சர்தார்ஜி வேகமாக ஜீப்பை ஓட்டினார். புலி மிகவும் பக்கத்தில் வந்துவிட்டதை பார்த்தார் சர்தார்ஜி. அப்போது ரோடு இடது புறமாகவும், வலது புறமாகவும் இரண்டாகப் பிரிந்தது.ஜீப் வலது புறமாக திரும்பப் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, ஜீப்பை இடது புறமாக ஓட்டி சென்றுவிட்டார் சர்தார்ஜி. புலியும் அவர் எதிர்பார்த்ததுபோல் வலது புறமாகத் திரும்பி ஓடியது. ஆனால் மீண்டும் ரோடு ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்தது. இப்போது புலி ஜீப்பை தொட்டு விடும் தூரத்தில் இருந்தது. ஆனால் மீண்டும் ரோடு இரண்டாக பிரிந்தது. இப்போது சர்தார்ஜி இடது புறம் போவதாக சிக்னல் காட்டிவிட்டு, வலது புறமாக ஜீப்பை ஓட்டிச் சென்றுவிட்டார். புலி வலது புறமாக சென்றுவிட்டது.சர்தார்ஜியின் துரதிஷ்டம், ரோடு மீண்டும் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்தது. ஆனால் ரோடு வெகு தூரத்துக்கு பிரியவே இல்லை. புலி ஒரே பாய்ச்சலில் ஜீப்பில் ஏறும் நிலையில் இருந்தது. இப்போது சர்தார்ஜி ஓவர்டேக் சிக்னல் காண்பிக்க, புலி சர்தார்ஜியின் ஜீப்பை ஓவர்டேக் செய்து கொண்டு வேகமாக சென்றுவிட்டது.இதிலிருந்து என்ன தெரிகிறது?
------------------------
ஒரு சர்தார்ஜிக்கு இடக்கை துண்டாகி விட்டது.ஒரே கையோடு போய்க் கொண்டிருந்தார்.அவரைப்பார்த்த அவர் நண்பர் "என்ன பல்பீர்?எப்படி இப்படி ஆச்சு? என்று கேட்டார்."பேக்டரியில் வேலை செய்தபோது மிஷின் கையை வெட்டி விட்டது" என்றார் பல்பீர்."நல்லவேளை.இடக்கை போனது.வலக்கை போயிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டிருப்பாய்!" என்றார் அந்த நண்பர்"வலக்கை தான் துண்டாக இருந்தது. நான் கடைசி நிமிடத்தில் மிஷின் இறங்குவதை கவனித்து வலக்கையை எடுத்து விட்டு இடது கையை வைத்தேன்." என பெருமையுடன் சொன்னார் பல்பீர்!!!
---------------------
ஒரு நேர்காணலில் Mr.சர்தார்ஜிகேள்வி கேட்பவர்: மின்சார மோட்டார் எப்படி வேலை செய்கிறது?சர்தார்: டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கேள்வி கேட்டவர் (கத்தியபடி): நிறுத்து.சர்தார்: டுர் டுப் டுப் டுப் டுப்.
----------------------
புனேவிலிருந்து சண்டிகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் செல்ல சர்தார்ஜி ஒருவர் டிக்கட் வாங்கியிருந்தார். விமானத்தில் மூன்று சீட்டுகள் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் உள்ள சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. விமானத்தில் நுழைந்தவுடன் நடு சீட்டில் உட்காராமல் ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டார். ஜன்னல் சீட் ஒதுக்கப்பட்டிருந்த பெண், "அது என்னுடைய சீட் தயவு செய்து எழுந்திருங்கள்" என்று கூறினார். சர்தார்ஜியோ, "முடியாது" என்று சொல்லிவிட்டார்.அந்த பெண் வேறு வழியில்லாமல் பணிப்பெண்ணிடம் புகார் கூறினார். விமானப் பணிப்பெண் வந்து சொல்லிப்பார்த்தார். ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய ஆசைப்படுவதால் சீட்டை தர முடியாது என்று சர்தார்ஜி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். உதவி கேப்டன் சொல்லிப் பார்த்தார். சர்தார்ஜி அசையவில்லை.விஷயத்தை கேள்விப்பட்ட விமானத்தின் கேப்டன் சர்தார்ஜியின் அருகில் வந்து காதோரமாக ஏதோ சொன்ன வினாடியே சர்தார் அவசர அவசரமாக நடு சீட்டுக்கு மாறிவிட்டார்.விமானி சொன்னது இதுதான்:“நடுவிலுள்ள சீட்கள் மட்டும்தான் சண்டிகருக்குப் போகிறது. மற்ற சீட்கள் எல்லாம் ஜலந்தருக்கு செல்கின்றன
--------------------------------
சர்தார்: என்னடா ரொம்ப சோகமா இருக்க?நண்பர்: எவனோ பூட்டை உடைச்சி 50,000 திருடிட்டு போயிட்டான்சர்தார்: பூட்டுக்குள்ள ஏண்டா 50,000 ஒளிச்சி வச்ச?
---------------
சர்தார்ஜி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. உறவினர், நண்பர்களுக்கு அவர் திருமண அழைப்பிதழ் அனுப்பினார். வெளிïரில் உள்ள நெருங்கிய நண்பர் ஒருவருக்கும் ஒரு கடிதத்துடன் அழைப்பிதழை இணைத்து அனுப்பினார். கடிதத்தில், திருமணத்திற்கு கட்டாயம் வரவும் என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், நண்பரானவர் சர்தார்ஜியின் திருமணத்திற்கு வரவில்லை. இதனால் நண்பர் மீது கோபம் கொண்டார் சர்தார்ஜி.ஒரு நாள் அதே நண்பனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது சர்தார்ஜிக்கு. அப்போது திருமணத்திற்கு ஏன் வரவில்லை என்று கேட்டு ஒரு பிடிபிடித்தார்.நண்பரோ, தனக்கு திருமண அழைப்பிதழே வரவில்லை என்றும், கிடைத்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன் என்றும் கூறினார்.அதற்கு சர்தார்ஜியோ, `அது எப்படி! நான் தானே, அழைப்பிதழ் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும் என்று கடிதத்தில் எழுதி இருந்தேன்! கடிதம் கிடைக்கா விட்டாலும் வந்திருக்க வேண்டியது தானே' என்றார்.
---------------------
ரயிலில் டிக்கட் பரிசோதகர் வந்து டிக்கட் கேட்டார்.தேடித் தேடிப் பார்த்த சர்தார்ஜியிடம் இல்லை.டிக்கட் பரிசோதகர் "சரி பரவாயில்லை. நீங்க டிக்கட் வாங்கியிருக்கீங்கன்னு நம்புறேன்" என்றார்.சர்தார்ஜி, "ஐய்யோ! நான் எங்கே இறங்குவது என்று டிக்கெட்டில் தானே இருக்கு!" என்றார்.
---------------------------------
நான்கு சர்தார்ஜிக்கள் சேர்ந்து வியாபாரம் துவங்க நினைத்தனர். பணம் முதலீடு செய்து விட்டனர்.முதலில் ஓட்டல் தொழில் துவங்கினர். மூன்று நாட்கள் பார்த்தனர். யாருமே அவர்கள் ஓட்டலுக்கு வரவில்லை.காரணம்: "பொதுமக்களுக்கு அனுமதியில்லை" என்னும் போர்டு முன்னால் இருந்தது!சரியென்று ஒரு மெக்கானிக் ஷாப் துவங்கினர். அதற்கும் மூன்று நாட்களாக யாரும் வரவில்லை.காரணம்: மெக்கானிக் ஷாப் இரண்டாவது மாடியில் இருந்தது!அதுவும் போதாதென்று, டாக்ஸி வாங்கினர். அதற்கும் அதே கதி தான். மூன்று நாட்களாக ஒரு சவாரியும் இல்லை.காரணம்: 4 சர்தார்ஜிக்களும் டாக்ஸியில் உட்கார்ந்திருந்தனர்!கோபத்தில் அந்த டாக்ஸியை மலை உச்சியில் தள்ளி விடலாம் என்று முடிவு செய்தனர். அதுவும் அவர்களால் முடியவில்லை.காரணம்: இருவர் முன்புறம் இருந்து தள்ள, இருவர் பின்புறம் இருந்து தள்ளிக் கொண்டிருந்தனர்!
----------------------
சர்தார் ஒரு டாக்டர்கிட்டே வந்து.." டாக்டர்.. தேனீ கொட்டிடுச்சி...!"" கவலைப்படாதே.. "அது" மேலே மருந்து போட்டு விடறேன்.."" "அது" இன்னேரம் எங்கே பறந்து போச்சோ..?""ஹா..ஹா.. கொட்டுன இடத்தைக் காட்டு.. மருந்து போட்டு விடறேன்..""தோட்டத்திலே டாக்டர்.. மரத்துக்கு கீழே.. அங்கே மருந்து போட்டா இங்கே எனக்கு வலி குறையுமா..?""அடேய் கிறுக்கா.. உன்னோட உடம்புல எந்த இடத்துல கொட்டிச்சு..?""ஓ.. அதுவா.. விரல்ல டாக்டர்..! ஆ... ரொம்ப வலிக்குது டாக்டர்.."" எது காட்டு..?"" எதுன்னு எப்படி டாக்டர் சொல்ல முடியும்..? அந்த தேனீ நூத்துக்கணக்குல இருக்குமே..!"
---------------------

சர்தார்ஜி ஜோக்ஸ் 2

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி.
-------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.சர்தார்: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?****சர்தாரும் அவர் மணைவியும் விவாகரத்துக்கு மணு கொடுத்தனர்.நீதிபதி: உங்களிட்ம் மூனு குழந்தைகள் உள்ளனர். இப்போ பிரிஞ்சீங்கன்னா? சிக்கல் வரும்.சர்தார்: சரி. அப்ப நாங்க அடுத்த வருசம் வர்ரோம் ஐயா.****டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம் கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.
----------------------------------

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

-----------------------------------

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டனர். என்ன செய்வது என்று இந்திய வீரர்கள் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்டு ஒரு சர்தார் மட்டும் தன் மேல் கொசு வலை ஒன்றை சுற்றிக் கொண்டு, மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாகிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். நிலைகுழைந்த பாகிஸ்தானிய வீரர்கள் ஓடி விட்டனர். சர்தாரின் வீர செயலை பாரட்டி எல்லோரும், சர்தாரிடம் கொசு வலையை போர்த்திக் கொண்டு எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டனர். அதற்கு சர்தார் சொன்னார், "எல்லாம் கொசு வலையை போர்த்திக் கொண்டால் குண்டு துலைக்காது என்கிற தைரியத்தில்தான், இவ்வளவு சின்ன கொசுவினாலேயே இதனுல் நுழைய முடியவில்லையே, அதை விட பெரிய தோட்டா எப்படி நுழையும்" என்றார்..இராணுவத்திலிருந்து இந்த சர்தாருக்கு ஓய்வு கிடைத்த பிறகு அவருடை மகனுக்கு அங்கே வேலை கிடைத்தது. இன்னொரு முறை போர் நடந்துக் கொண்டிருந்த போது, எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தானிய படைகள் சூழ்ந்துக் கொண்டது. இம்முறை சர்தார்(மகன்) மட்டும் மறைவிடத்தை விட்டு வெளி வந்து பாக்கிஸ்தானிய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். ஆனால் எதிரிகள் திருப்பி சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப் பட்டார். அங்கு அவரை பார்க்க வந்த சகவீரர் ஒருவர் கேட்டார் "உன் அப்பாவாவது உடம்பில் கொசுவலையை போர்த்திக் கொண்டு எதிரியை நோக்கி சுட்டார், நீ ஏன் ஒன்றுமே அணியாமல் வெளியே வந்தாய்?" அதற்க்கு சர்தார் சொன்னார், "நான்தான் உடம்பில் ஓடோமாஸ் (கொசு கடிக்காமல் இருக்க உடம்பில் சிக்கொல்லும் ஒரு வகை மருந்து) சியிருந்தேனே" என்றார்.

------------------
சர்தார்ஜி நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தன் நண்பரைப் பார்க்கச் சென்றார்.நண்பரின் உறவினர்கள் அனைவரும் வெளி வராண்டாவில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.மருத்துவர் இன்னும் சில நாட்களில் குணமாகிவிடும் என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.அவர்களை விடுத்து சர்தார்ஜி தம் நண்பர் இருக்கும் அறைக்குச் சென்று வாங்கி வந்த பழங்களை அருகில் இருந்த மேசையின்மேல் வைத்துவிட்டு தம் நண்பரின் அருகில் சென்று பார்த்தார்.அவரோ முகம் வெளிறி மூச்சுவிட மிகவும் சிரமப் பட்டுக்கொண்டிருந்தார்.திடீரென என்னவோ சொல்லமுற்பட்டார் நோயாளி நண்பர்.அவரின் செய்கையை வைத்து காகிதமும் பேனாவும் கேட்கிறார் எனப் புரிந்துகொண்டு கொடுத்தார்.நண்பர் எழுதிக் கொண்டிருக்கும்போதே இருமுறை உடல் வெட்டி இழுத்தது.அவ்வளவுதான் உயிர் பிரிந்துவிட்டது.அப்போதிருந்த அவசரத்தில் உடனே காகிதத்தை சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு ஆகவேண்டிய காரியங்களைப் பார்த்தார்.வீட்டிற்கு வந்ததும்தான் காகித ஞாபகம் வந்தது சர்தார்ஜிக்கு.மனைவியிடம் கொடுக்கச் சொல்லி ஏதும் ரகசியமாக நண்பர் எழுதி இருக்கலாம்...அடுத்தவரின் மடலைப் படிப்பது தவறு என்றெண்ணி அதனை எடுத்துக்கொண்டு மறுநாள் நண்பரின் வீட்டிற்கு சென்று அவரின் மனைவியிடம் கொடுத்தார்.வாங்கிப் படித்த அந்த அம்மாள் மூர்ச்சையாகி விழுந்தார்!அப்படி என்னதான் எழுதி இருக்கிறது என அக்காகிதத்தை எடுத்துப் படித்தார் சர்தார்ஜி...அதில்..... "சீக்கிரம் நகருடா...நீ ஏறி நிக்கிறது எனக்கு ஆக்ஜிஸன் வர்ற டியூப்!!!"

---------------------------------
அமெரிக்காவின் மிக முக்கிய சாலையொன்றில் காரைச் செலுத்திக்கொண்டிருந்தார் நம் சர்தார்ஜி. வளைவு, நெளிவுகள், முந்துதல், பிந்துதல்,வேகம் எல்லாமே விதிப்படிதான் செய்தார்.இருந்தாலும் தன்னை போக்குவரத்துக் காவலர்கள் பின் தொடர்வதை பக்கவாட்டில் உள்ள கண்ணாடியில் பார்த்தார்.நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு கட்டத்தில் காவலர்கள் இவரின் காரை வழி மறித்தனர்.காரில் இருந்து இறங்கி வந்து சர்தார்ஜியின் கையைக்குலுக்கி"இவ்வாரம் சாலைப் பாதுகாப்பு வாரம்.நாங்கள் சிறந்த வாகன ஓட்டுனர்களைக் கண்டறிந்து பாராட்டுப்பத்திரமும் பணமுடிப்பும் வழங்கிக் கௌளரவிப்போம்.நெடுநேரமாக உங்களைப் பின் தொடர்ந்ததில் நீங்கள் ஒரு சிறந்த ஓட்டுனர் என முடிவு செய்தோம்"உடனே சர்தார்ஜி சொன்னார்,"அப்படியா மிக்க மகிழ்ச்சி.கண்டிப்பா கிடைக்கும் பணத்தில் முதலில் லைசென்ஸ் எடுத்துவிடுவேன்"சர்தார்ஜியின் மனைவிக்கு கோபம் வந்து கத்தினார்"அவர் சொல்றதை நம்பாதீங்க...அவர் ஏதோ குடிச்சிட்டு உளறுகிறார்!"காரில் தூங்கிய சர்தார்ஜியின் காது கேளாத அம்மா களேபரங்களைக் கேட்டு கண்விழித்து சொன்னார்"ஏண்டா நான் அப்பவே சொன்னேனே கேட்டியா...திருட்டுக் காரை எடுத்து வரவேண்டாம் இங்கெல்லாமுன்னு!!!
-------------------------------------------------------
உதவி..!உதவி..!கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது..எங்கும் அழுகுரல்கள்.. ஓடினர்..அழுதனர்.. பலர் இறைவனைத் தொழுதனர்..நம் சர்தார்ஜிக்குப் பக்கத்தில் நின்றிருந்த இத்தாலியர் கேட்டார்,“இங்கிருந்து நிலம் எவ்வளவு தொலைவு?”“இரண்டு மைல்கள்”-சர்தார்ஜி பதில் அளித்தார்.“ப்பூ..வெறும் இரண்டு மைல்தானா? இதுக்குப் போய் ஏன் இந்த முட்டாள்கள் அழுது புலம்புகின்றனர்? எனக்கு நீச்சலில் நல்ல அனுபவம் உண்டு” சொல்லிக் கொண்டே கடலுக்குள் குதித்தார் இத்தாலியர்!குதித்த இத்தாலியர் தண்ணீரின் மட்டத்திற்கு வந்ததும் கேட்டார், "எந்தப் பக்கமா நீந்தனும்?”“அப்படியே கீழ் நோக்கி”-சர்தார்ஜி அசால்ட்டாகப் பதிலளித்தார்

-------
சர்தார்ஜி பல்கலைக் கழகத்தின் இறுதி ஆண்டுத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். தன் இருக்கை தேடி அமர்ந்ததும் கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் முழுதையும் ஐந்து நிமிடம் வாசித்தார். பின் தனது காலணிகளைக் கழட்டி ஜன்னலுக்கு வெளியே வீசினார். பின் தனது தலைப்பாகையை வெளியே வீசினார். அடுத்து தனது மேற்சட்டை, குழாய்ச் சட்டை, காலுறைகள், கைக்கடிகாரம் என எல்லாவற்றையும் அவ்வாறே வெளியே வீசினார். எஞ்சியது அவரின் உள்ளாடை மட்டுமே!அப்போதுதான் பார்த்த கண்காணிப்பாளர் ஓடிவந்து கெட்டியாக சந்தார்ஜியைப் பிடித்துக்கொண்டு கேட்டார்,” என்ன நடக்குது இங்கே?” “நான் இந்த கேள்வித்தாளில் எழுதி இருந்த அறிவுரைப் படிதான் நடக்கிறேன். நீங்களே பாருங்க..ஆன்சர் த பாலோயிங் கொஸ்டின் இன் ப்ரீப்( Answer the following questions in brief!) னு எழுதி இருக்குது!”:?
-----

சர்தார்ஜி ஜோக்ஸ் 1

நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக் கொண்டிருக்கிறார்.வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து கேட்கிறார்."ஆர் யூ ரிலாக்ஸிங்?""இல்லை.. நான் பாண்டாசிங்."அந்தப் பெண் சென்றுவிட, மற்றொரு ஆள் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?""இல்லை..நான் பாண்டாசிங்."அந்த ஆளும் சென்றுவிட, மூன்றாமவர் வருகிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?"கடுப்பாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்த பாண்டாசிங், சர்தார் போலத் தோற்றமளித்த மற்றொரு நபரைப் பார்த்துக் கேட்கிறார். "ஆர் யூ ரிலாக்ஸிங்?""ஓ..யெஸ்... .ஐ ஆம் ரிலாக்ஸிங்."காதுகள் ஜிவ்வென ஆன பாண்டாசிங் கத்துகிறார் "அரே பச்சா... அங்கே எல்லாரும் உன்னத் தேடிட்டு இருக்காங்க... நீ என்னடான்னா இங்க உட்காந்துருக்கியே"

நேர்காணல்

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும் .. எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்..அதைத்தவிர உன்கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதை யெல்லாம் இல்லே ..!

உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானேஆகணு ம் .. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.

உங்களுடைய தனித்திறமை என்ன..?வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன் .. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்..உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்.. அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன் .. இதைத்தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது .

உங்கள் மிகப்பெரியபலம்..?இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்..மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா ,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..

பலவீனம் ..?ஹி.. ஹி .. பெண்கள்..!

இதற்குமுன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன் .. அந்த சாதனைகளை பெருசா பில்டப்பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா ..?

நீங்கள் சந்தித்த மிகப் பெரும் சவால் என்ன ..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம் .. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ .. அதே காரணத்துக்காகத்தான்..!

இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?நல்ல சம்பளம், 0 % வேலை,பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண் , நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒருகூட்டம் . அது போதும்.

Website counter

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP